நெதர்லாந்தில் இருந்து பயணிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்

நெதர்லாந்தில் இருந்து போயிங் 760300 ஈஆர் விமானத்தில் 230 பயணி;கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்;.

மத்தளை விமானநிலையத்துக்கு இவர்கள் பயணித்த விமானம் வந்திறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில்; காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலுக்காக செல்லவேண்டிய பயணிகளும் மாலுமிகளும் அடங்கியிருந்தனர்.

விசேட மனிதாபிமான அனுமதியின்பேரில் இவர்கள் அழைத்துவரப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் அனைவரும் கிருமிநீக்க நடவடிக்கைளின் பின்னர் காலி துறைமுகத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்

பின்னர் அங்கிருந்து 53 பேர் மீண்டும் மத்தளைக்கு அழைத்துவரப்பட்டனர்

இந்தநிலையில் இவர்கள் 53பேரும் இன்று இரவு நெதர்லாந்தை நோக்கி பயணிக்கவுள்ளனர்

Related posts