தன்னை கொரோனாவிலிருந்து காப்பாற்றிய மருத்துவர்களின் பெயரை தனது குழந்தைக்கு சூட்டினார் பிரிட்டிஷ் பிரதமர்..!!

தன்னை கொரோனாவிலிருந்து காப்பாற்றிய மருத்துவர்களின் பெயர்களை உள்ளடக்கி தனது குழந்தைக்கு பெயர் சூட்டியுள்ளார் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன்.

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தம்பதியருக்கு கடந்த 29 ஆம் திகதி ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தைக்கு வில்பிரட் லாரி நிக்கோலஸ் ஜான்சன் (Wilfred Lawrie Nicholas Johnson) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரோனா வைரஸால் பதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது அவருக்கு இந்த இரண்டு மருத்துவர்களும் சிகிச்சை அளித்தனர்.

இதற்கு மரியாதை செலுத்தும் முகமாக தனது குழந்தைக்கு பிரதமர், அவர்களது பெயரை சூட்டியுள்ளார் என அவரது உதவியாளர் தெரிவித்தார்.

மருத்துவர் நிக் பிரைஸ் (Dr Nick Price ) மற்றும் மருத்துவர் நிக் ஹார்ட் (Dr Nick Hart) ஆகிய இருவருமே போரிஸ் ஜோன்சனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களாவர்.

Related posts