ஊரடங்கு உத்தரவை மீறிய 45,115 பேர் கைது..!!

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 45 ஆயிரத்து 115 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த 11 ஆயிரத்து 699 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்ட பொழுது கொழும்பில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல இயலாமல் தங்கியிருந்த சுமார் 370 பேரை தங்களது சொந்த வீடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts