இணையத்தில் ரிலீசாகிறதா ‘மாஸ்டர்’ திரைப்படம்..

இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு பற்றிய புதிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இளைய தளபதி விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நறைவு பெற்று வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

கடந்த 9ம் திகதி வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொடர் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வெளியிடு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் விஜயின் மாஸ்டர் திரைப்படம் இணையத் தளத்தில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து படத்தின் இணைத் தயாரிப்பாளரான லலிதாகுமார் தகவல் வெளியிட்டுள்ளார்.

‘மாஸ்டர்’ படம் இணையத்தளத்தில் ரிலீஸ் செய்யப்படும் என்பது வெறும் வதந்தி. சந்தர்ப்பம் பார்த்து யாரோ வதந்தியைப் பரப்புகிறார்கள். பல கோடி செலவில் உருவான ‘மாஸ்டர்’ படம் தியேட்டர்களில்தான் வெளிவரும். இணையத்தளங்களில் ரிலீஸ் ஆகாது எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Related posts