ஆப்கானிஸ்தானில் பட்டினி அபாயத்தில் 7 மில்லியன் சிறார்கள்..!!

ஆப்கானிஸ்தானிலுள்ள 7 மில்லியனுக்கும் அதிகமான சிறுவர்கள் பட்டினியை எதிர்நோக்கியுள்ளதாக அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையால் இந்தநிலை ஏற்பட்டுள்ளாக குறித்த அறிக்கைகள் எச்சரித்துள்ளன.

சர்வதேச சமூகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறும் பட்சத்தில், ஆப்கானிஸ்தான் பட்டினியை எதிர்நோக்குவதுடன், அதனால் நோய்கள் ஏற்படுவதுடன் மரணங்களும் சம்பவிக்குமென சிறுவர்களுக்கான அரச சார்பற்ற நிறுவனமொன்றின் பேச்சாளர் எச்சரித்துள்ளார்.

7.3 மில்லியன் சிறுவர்கள் உள்ளடங்கலாக, ஆப்கன் சனத்தொகையில் 3/1 வீதமானோர் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளதாகவும் குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts