அரச சார்பற்ற அமைப்பின் ஆலோசகர் கைது..!!

சிலாபம் கல்பிட்டியை சேர்ந்த அரச சார்பற்ற அமைப்பின் ஆலோசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையின் ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் மூலகர்த்தா என நம்பபப்படும் ஷஹ்ரான் ஹாசிம் விரிவுரை செய்வதற்கும் ஆயுத பயிற்சி வழங்குவதற்கும் ஏற்பாடுகளை செய்து கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்

மேலும்

இலங்கையில் கொரோனவைரஸ்; தொற்றாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது

இலங்கையில் கொரோனவைரஸ்; தொற்றாளிகளின்  எண்ணிக்கை இன்று மாலை வரை 707 ஆக உயர்ந்துள்ளது  இதேவேளை கொரோனவைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 12பேர் குணமான நிலையில் இன்று வீடு திரும்பினர்இதனையடுத்து கொரோனவைரஸில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 184ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

மேலும்

பேருவளை மற்றும் கண்டியின் அக்குரனை ஆகிய இடங்களில் இன்று வழமையான நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

கொரோனவைரஸ் தொற்றுக்காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பேருவளை மற்றும் கண்டியின் அக்குரனை ஆகிய இடங்களில் இன்று வழமையான நிலைக்கு திறந்துவிடப்பட்டன. கண்டியின் அக்குரனை பிரதேசம் பேருவளையின் பன்னில மற்றும் சீனக்கொட்டுவ ஆகிய இடங்களே இன்று வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. கொரோனவைரஸ் பரவல் காரணமாக இந்த இடங்களில் சில வாரங்களுக்கு முன்னர் தனிமைப்படுத்தப்பட்டன. இதனையடுத்து அங்கிருந்தோர் வெளியில் செல்லமுடியாது. வெளியில்…

மேலும்

கிழக்கு ஆளுனரின் செயலாளர் நியமனம்

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநரின் செயலாளராக  பிரசன்னா மதனநாயக்க பொறுப்பேற்றார்.இந் நியமனத்தை கிழக்கு ஆளுனர் அநுராதா யஹம்பத் (30) ஆளுனர் செயலகத்தில் வைத்து வழங்கியுள்ளார் மதானநாயக்க பேராதெனிய பல்கலைக்கழகத்தில் அறிவியல் இளங்கலை பட்டமும், ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் நிர்வாகத்தில் இளங்கலை பட்டமும், களனி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டமும் பெற்றவர்.திரு. பிரசந்தா மதானநாயக்க, பொது நிர்வாகத்தை  தொடர்ந்து…

மேலும்