நாட்டில் 41 முதல் 54 செல்சியஸ் வரையிலான வெப்பநிலை..!!

நாட்டில் ஆபத்தான அளவான 41 முதல் 54 செல்சியஸ் வரையிலான வெப்பநிலை சில இடங்களில் எதிர்பார்க்கப்டுவதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது

புத்தளம்¸ அநுரதபுரம் மன்னார் முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனைதவிர கிழக்கு¸ மேல்¸ தென்¸ சப்ரகமுவ மாகாணங்களிலும் குருநாகல பொலநறுவை¸ மொனராகவை¸ மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கும் அதிக வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வெப்ப நிலை நிலவும் போது தொடர் பணிகளில் ஈடுபடுவோருக்கு வெப்பஅழுத்தம் வெப்ப தசைப்பிடிப்பு என்பன ஏற்படும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது

Related posts