நாட்டின் பல பகுதிகளிலும் இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை அவதான மையம் அறிவித்துள்ளது.

மேல்¸ மத்திய¸ சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி¸ மாத்தறை¸ மாவட்டங்களிலும் கடும் மழை பெய்யும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதேவேளை மேல்;¸ தென் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களின் கரையோரங்களில் மழை பெய்யும்.

இதன்போது ஏற்படும் சேதங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்

இதற்கிடையில் வங்காளவிரிகுடாவில் தாழ்அமுக்கம் ஏற்பட்டுள்ளமையால் கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் விழிப்புடன் செயற்படுமாறு வானிலை மையம் கோரியுள்ளது

Related posts