ஊரடங்கின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம்..!!

ஊரடங்கின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட நாவலப்பிட்டிய நகரசபை தவிசாளர் உட்பட்ட 7 பேரையும் மே 6ஆம் திகதிவரை விளக்கமறியில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நேற்று இவர்கள் மன்றில் முன்னிலையாக்கப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படடது

இவர்களுக்கு பிணைக்கோரப்பட்டபோதும் தனிமைப்படு;த்தல் சட்டத்தின்கீழ் இது சாதாரணக்குற்றம் அல்ல என்றுக்கூறி நீதிவான் பிணைக்கோரிக்கையை நிராகரித்தார்.

இவர்கள் நேற்று முன்தினம் கினிகத்தென்ன நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்

Related posts