இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் கருத்து தொடர்பில் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

கொரோனவைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் பொதுத்தேர்தலை நடத்தமுடியாது என்று எதிர்க்கட்சிகளின் தர்க்கத்துக்கு பதிலளித்திருந்த பந்துல குணவர்த்தன கடந்த காலங்களில் டெங்குவினால் பொதுமக்கள் இறக்கின்றபோது தேர்தல்கள் நடத்தப்பட்டதாக நியாயம் தெரிவித்திருந்தார்.

எனினும் இது மிகவும் அறிவார்ந்த கருத்தா? என்று குமார் சங்கக்கார தமது டுவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்

Related posts