சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்ட 31 சந்தேக நபர்களை நேற்றிரவு கைது..!!

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் வன ஜீவராசி பாதுகாப்பு பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்ட 31 சந்தேக நபர்களை நேற்றிரவு கைது செய்துள்ளதாக கந்தளாய் வனஜீவராசி பாதுகாப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு சட்டவிரோத துப்பாக்கிகளும்இதேன் போத்தல்களும்இமரை இறைச்சி வகைகள் மற்றும் கத்தி மண்வெட்டி போன்ற பொருட்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் கந்தளாய் வன ஜீவராசி பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் கந்தளாய்இ வான்எலஇஅக்போபுரஇஜயந்திபுரஇபேராறு போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கின்றனர்.சந்தேக நபர்களை சேருவில பொலிஸார் ஊடாக இன்றைய தினம் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

Related posts