ஊரடங்குச்சட்டம் மே 11வரை நீடிக்கப்பட்டுள்ளது..!!

கொழும்பு¸ களுத்துறை கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச்சட்டம் மே 11வரை அதிகாலை 5மணிவரை நீடிக்கப்படுவதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது

இந்த 4மாவட்டங்களிலும் மே 11ஆம் திகதி முதல் இயல்புப்பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் மே 4ம் திகதிவரை நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு சட்டம் திங்கட்கிழமை முதல் மே 6ஆம் திகதிவரை இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 5 மணிவரை அமுல்செய்யப்படு;ம்.

பின்னர் அந்த மாவட்டங்களிலும் மே 6ஆம் திகதி இரவு 8 மணி முதல் 11 ஆம் திகதி அதிகாலை 5மணிவரை ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமுல்செய்யப்படும் என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Related posts