அரசியலமைப்பு கேள்விகளுக்கு ஜனாதிபதியின் கடிதத்தில் பதில்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.

தாம் தமது கடிதத்தில் எழுப்பியிருந்த முக்கிய அரசியலமைப்பு கேள்விகளுக்கு ஜனாதிபதியின் கடிதத்தில் பதில்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின்படி ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைப்பதாக வர்த்தமானியை வெளியிட்டு மூன்று மாதக்காலத்துக்குள் புதிய தேர்தல் நடைபெறாமையால் ஜனாதிபதி பழைய நாடர்ளுமன்றத்தை கூட்டி பொதுச்செலவு நிதிக்கான ஒப்புதலை பெறவேண்டும் என்று மங்கள சமரவீர தமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் அரசியலமைப்பை மீறுவோருக்கு அதிகபட்சம் 7 வருடங்களுக்கு குடியுரிமையை ரத்துச்செய்ய சட்டத்தில் இடமிருப்பதாக மங்கள சமரவீர சுட்டிக்காட்டியிருந்தார்.

எனினும் இதற்கான ஜனாதிபதியின் பதிலை அவரது செயலாளர் பிபி ஜெயசுந்தர¸ மங்கள சமரவீரவுக்கு அனுப்பியிருந்தார்.

அதில் மங்கள சமரவீரவின் கடிதத்தில் பல பிழையான தகவல்கள் இருப்பதாக ஜனாதிபதியி;ன் சார்பில் பிபி ஜெயசுந்தர தெரிவித்திருந்தார்.

புதிய தாராளமயக்கொள்கையில் சமூக பொருளாதார மாதிரியில் நம்பிக்கைக்கொண்ட முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர¸ மக்கள் தமது ஜனநாயக உரிமையை தேர்தல் மூலம் உறுதிப்படுத்த விரும்பாமைக்காக ஜனாதிபதி வருந்துவதாகவும் அதில் பிபி ஜெயசுந்தர குறிப்பிட்டிருந்தார்

இதனையடுத்து மங்கள சமரவீர தமது டுவிட்டரில் ஜனாதிபதி தமது முக்கியமான அரசியல்அமைப்பு கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தவிர்த்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசியலமைப்பின் 150(3) பந்தியின்படி ஜனாதிபதிக்கு வெற்றுக்காசோலை வழங்கப்படவில்லை என்று மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கான திகதியில் இருந்து 3 மாதத்துக்கு மாத்திரமே ஜனாதிபதியினால் நிதியொதுக்கீட்டை செய்யமுடியும்.

இந்தநிலையில் எந்த திகதியில் புதிய நாடாளுமன்றம் கூட்டப்படவுள்ளது என்று மங்கள சமரவீர தமது டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts