160 கொரோனவைரஸ் தொற்றாளிகளுடன் சுமார் 42ஆயிரம் பேர்வரை தெடர்புகளை கொண்டிருந்தன.

நாட்டில் இதுவரை கண்டறியப்பட்ட 160 கொரோனவைரஸ் தொற்றாளிகளுடன் சுமார் 42ஆயிரம் பேர்வரை தெடர்புகளை கொண்டிருந்தமை அறியப்பட்டுள்ளது

எனவே சுகாதார அதிகாரிகள் கொரோனவைரஸ் தொற்று பரிசோதனைகளை துரிதப்படுத்தவேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் கோரியுள்ளது

அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத்தன் உறுப்பினர் வைத்திய கலாநிதி நவீன் டி சொய்ஸா ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது இதனை வலியுறுத்திள்ளார்

இந்தநிலையில்; நடைமுறையில் உள்ள பரிசோதனை முறை இந்த 42ஆயிரம்பேரையும் பரிசோதனை செய்வதற்கு போதுமானதல்ல என்பதை அவர் சுட்;டிக்காட்டினார்

எனவே கொரோனவைரஸ் தொடர்பில் வழமையாக மேற்கொள்ளப்படும் பிசீஆர் பரிசோதனைக்கு பதிலாக இரத்த பரிசோதனைகளை மேற்கொண்டு நேரத்தை மீதப்படு;த்துமாறு வைத்திய கலாநிதி நவீன் டி சொய்ஸா கோரிக்கை விடுத்தார்

Related posts