வெப்ப காலநிலையில் கொரோனவின் பரவல் குறையும்- ஆராய்ச்சியாளர்

கொரோனவைரஸ் தொற்றுநோய் குறைந்த வெப்பநிலை நாடுகளில் பரவலாக பரவுகிறது என்பது கணி;க்கப்பட்டுள்ளமையால் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக இலங்கை போன்ற நாடுகளில் அதன் பரவல் குறைவாகவே இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுயாதீன உள்ளூர் ஆராய்ச்சியாளர் ஹ_செஃபா அக்பரல்லி இதனை தெரிவித்துள்ளாhர்.

இந்தநிலையில் நேரத்தை வீணடிக்காமல் இலங்கை அதிகாரிகள் இந்த தொற்றை மொட்டிலேயே கிள்ளியெறிய இலங்கை அதிகாரிகள் கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்;.

எனினும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆராய்ச்சிகள் இந்த தொற்று குளிர் காலநிலையிலேயே அதிகம் பரவுவதாக ஹ_செஃபா அக்பரலி தெரிவித்துள்ளார்

அவுஸ்திரேலியாவின் மருத்துவ நிபுணர்கள் அன்வர் செத்வலா¸ பேராசிரியர் நேதன் பெட்டர் மற்றும் பேராசிரியர் ஜெப்ரி லெப்கோவிட்ஸ் ஆகியோருடன் இணைந்து தாம் ஆராச்சியில் ஈடுபட்டுள்ளதாக ஹ_செஃபா அக்பரலி தெரிவித்துள்ளார்.

இலங்கையை பொறுத்தவரை வெப்ப காலநிலை காரணமாக கொரோனவைரஸ் சமூக மட்டத்தில் பரவவில்லை.

எனினும் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் பரவி வருகிறது

எனவே இது குறித்து ஆராயபப்படவேண்டும். இதனை ஆராய்ந்து நடவடிக்கை எடுத்தால் இலங்கையில் இருந்து இந்த நோயை முழுமையாக விரட்டியடிக்கலாம் என்று மருத்துவ நிபுணர் அன்வர் செத்வலா தெரிவித்துள்ளார்

சீனாவின் வுஹான்¸ தெஹ்ரான்¸ மிலான்¸ மெட்ரிட் மற்றும் நியூயோர்க் என்பன குளிர்மிக்க இடங்களாகும். அத்துடன்; ஈரப்;பதனும் 75வீதத்துக்கும் குறைவானது.

எனவேதான் அங்கு இந்த பரவல் அதிகமாக உள்ளதாக ஹ_செஃபா அக்பரலி சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts