பொது சுகாதார பரிசோதகரை தாக்கிய சிறுவனை சிறுவர் ஆலோசனை நிலையத்துக்கு அனுப்புமாறு உத்தரவு

கொரோனவைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொது சுகாதார பரிசோதகரை தாக்கிய சிறுவனை எதிர்வரும் 25ஆம் திகதிவரை சிறுவர் ஆலோசனை நிலையத்துக்கு அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது

மாவனல்ல நீதிவான் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்

16வயதான இந்த சிறுவன் ரம்புக்கனை பகுதியில் வைத்து கடந்த சனிக்கிழமையன்று பொதுசுகாதார பரிசோதகரை கத்தியால் தாக்கியுள்ளார்

இதன்போது காயமடைந்த பொதுசுகாதார பரிசோதகர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்தநிலையில் நேற்று குறித்த சிறுவன் கைதுசெய்யப்பட்டார்.

Related posts