கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தேசிய வைத்திய முறைகள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது

கொரோனவைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தேசிய வைத்திய முறைகள் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் தேசிய மருத்துவத்துறை வைத்தியர்களுக்கும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மருத்துவத்துறை மருந்துகளும் சுதேச மருத்துவத்துறை மருந்துகளும் கொரோனவை கட்டுப்படுத்தும் என்பது குறி;த்து இதன்போது ஆராயப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்

இந்த கலந்துரையாடலில் சுமார் 50 சுதேசவைத்தித்துறை வைத்தியர்கள் கலந்து கொண்டதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்

Related posts