ஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

கொரோனவைரஸை கட்டுப்பாடை முன்னிறுத்தி நடைமுறைப்படு;த்தப்படும் ஊரடங்கு சட்டத்தின்போது அதனை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது

காவல்துறையின் உதவிக்காவல்துறை அதிபர் அஜித் ரோஹன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

சில குழுவினர் வீதிகளில் திரியும் கட்டாக்காலி நாய்களுக்கு உணவு வழங்குவது மற்றும் இருப்பிடம் அற்ற மக்களுக்கு உதவுவது போன்ற நடவடிக்கைகளுக்காக ஊடரங்கு நேரத்தில் உரிய அனுமதியின்றி வீதிக்கு வருவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

உரிய அனுமதியின்றி வீதிகளுக்கு வரும் இவ்வாறனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவர்களை கைதுசெய்ய நாளை முதல் விசேட காவல்துறைக்குழு செயலில் இறங்கவுள்ளதாக அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்

Related posts