இலங்கையில் இருந்து வெளியக கொடுப்பனவுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் இருந்து ஓஐஏ என்ற வெளியக முதலீட்டு கணக்கின் ஊடாக மேற்கொள்ளப்படும் கொடுப்பனவுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது

எதிர்வரும் 3 மாதங்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று அதிவிசேட வர்த்தமானி ஒன்றை வெளியிட்டுள்ளார்

இலங்கையில் டொலருக்கான கேள்வி அதிகரித்து செல்வதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்;பட்டுள்ளது.

இன்றைய நாள் முடிவின்போது அமரிக்க டொலர் ஒன்றுக்கு எதிரான ரூபாவின் விற்பனை விலை 199.ரூபா 40சதமாக இருந்தது.

இதனை தடுத்து ரூபாவின் பெறுமதியை தக்கவைக்கவேண்டுமெனில் இலங்கையில் இருந்து டொலர்கள் மூலம் செய்யப்படும் இறக்குமதிகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கான முதலீடுகளை தடுக்க வேண்டும்

இந்தநிலையில் டொலருக்கான கேள்வியை இலங்கைக்குள் குறைக்கமுடியும்

அத்துடன் டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை தடுக்கமுடியும் என்ற அடிப்படையிலேயே இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது

ஏற்கனவே கடந்த வாரத்திலும் ரூபாவின் பெறுமதியை தக்கவைத்துக் கொள்ள இலங்கை அரசாங்கம் புதிய நடைமுறை ஒன்றை அமுல்செய்தது.

இதன்படி வெளிநாடுகளில் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு நாணயங்களுக்கான கட்டுப்பாட்டை அரசாங்கம் தளர்த்தியிருந்தது.

எனினும் அரசாங்கம் எதிர்பார்த்த இலக்கை அடையமுடியாத நிலையிலேயே இன்று வெளியக முதலீட்டு கொடுப்பனவுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Related posts