இலங்கையின் சில உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை ஐக்கிய அரபு ராச்சியம் மறுத்துள்ளது.

இலங்கையின் சில உள்ளூர் ஊடகங்கள் தமது நாட்டில் மரணிக்கும் கொரோனவைரஸ் தொற்றாளர்களின் அடக்கம் தொடர்பில் வெளியிட்ட செய்திகளை ஐக்கிய அரபு ராச்சியம் மறுத்துள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய அரபு ராச்சியத்தின் தூதரகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

அதில் கொரோனவைரஸ் தொற்;றினால் மரணமாவோரை அடக்கம் செய்யாமல தகனம் செய்யுமாறு ஐக்கிய அரபு ராச்சியத்தில் உத்தரவிடப்பட்டுள்ளதாக இலங்கையின் சிங்கள ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளமை குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது

கொரோனவைரஸால் மரணமானவர்களின் உடங்களை சார்ஜாவின் அல் ராஜா பகுதியில் அடக்கம் செய்யவேண்டாம் என்று ஐக்கிய அரபு ராச்சியத்தின் மன்னர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவு¸ அந்த பகுதியில் போதுமான இடங்கள் இல்லையென்தை கருத்திற்கொண்டே விடுக்கப்பட்டதாக ஐக்கிய அரபு ராச்சிய தூதரகம் தெரிவித்துள்ளது.

எனினும் சிங்கள ஊடகங்கள் இதனை திரிபுப்படுத்தி ஐக்கிய அரபு ராச்சியத்தில் கொரோனவைரஸால் மரணித்தவர்களை அடக்கம் செய்யக்கூடாது என்று மன்னர் உத்தரவிட்டுள்ளதாக செய்திகளை வெளியிட்டுள்ளன

இது தொடர்பில் தாம் கடும் அதிருப்தியை வெளியிடுவதாக கூறியுள்ள ஐக்கிய அரபு ராச்சிய தூதரகம்¸ இது இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டவும் இனவாதத்தை தூண்டவும் மேற்கொள்ளப்படும் முயற்சி என்று குற்றம் சுமத்தியுள்ளது.

Related posts