நியூயோர்க் நகரத்தில் மாத்திரம் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3665 ஆக உயர்ந்துள்ளது

அமரிக்hவின் நியூயோர்க்கில் நேற்றைய ஒருநாளில் கொரோனவைரஸினால் ஏற்பட்ட மரண எண்ணிக்கை 630 என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து அந்த நகரத்தில் மாத்திரம் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3665 ஆக உயர்ந்துள்ளது

முழு அமரிக்காவிலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8000 ஆக அதிகரித்துள்ளது

மூன்று லட்சம் பேர் வரை தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

உலகளாவிய ரீரியல் 60ஆயிரம் பேர் இந்த தொற்றினால் உயிரிழந்துள்ளார்கள்.

11 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஜோன் ஹொப்ஹின்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பிரித்தானியாவில் நேற்று ஒருநாளில் மாத்திரம் 708போ மரணமாகினர்

ஸபெயினில் நேற்று மாத்திரம் 809ஆக மரணமாகினர்

எனினும் அது இந்த வாரத்தின் குறைந்த ஒருநாள் எண்ணிகையாக கருதப்படுகிறது

இத்தாலியில் நேற்று 681பேர் மரணமாகினர்

இதனையடுத்து அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15ஆயிரத்து 362 ஆக உயர்ந்துள்ளது

குவைத்தில் நேற்று முதலாவது கொரானவைரஸ் மரணம் பதிவாகியுள்ளது.

79வயதான பெண் இந்த தொற்றுக்கு காவுகொள்ளப்பட்டுள்ளார்.

இந்தியாவில் இதுவரை கொரோனவைரஸ் தொற்றுக்கு 75பேர் மரணமாகியுள்ளனர்

3072 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

Related posts