இலங்கையில் கொரோனவைரஸ் தொற்று தொடர்பில் ஆபத்துநிலை நீங்கவில்லை

இலங்கையில் கொரோனவைரஸ் தொற்று தொடர்பில் இன்னும் ஆபத்துநிலை நீங்கவில்லை

எனினும் கொரோன தொற்று தொடர்பில் ஆபத்து குறைந்த பகுதிகளுக்கான கட்டுப்பாடுகள் எதிர்வரும் தமிழ் சிங்கள் புதுவருடத்தின் பின்னர் தளர்த்தப்படலாம் என்று ஜனாதிபதியின் ஊடப்பிரிவு தெரிவித்துள்ளது

இதனையடுத்தே நிலைமை தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

ஜளாதிபதி கோட்டாபய தலைமையில் நேற்று கொரோனவைரஸ் நிலைமை பரிசீலனை கூட்டம் நடைபெற்றது

இதன்போது அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத்தின் தலைவர் அனுருத்த பாதெனிய நிலைமைகளை விளக்கினார்

அரசாங்கம் உரிய நேரத்துக்கு உரிய நடவடிக்கைகளை எடுத்தமையால் தற்போது கொரோனவைரஸ் தொற்றை முகாமைத்துவப்படுத்தமுடிந்திருக்கிறது என்று அவர் தெரிவி;த்தார்.

கொரோனவைரஸ் தொற்று தொடர்பில் சில மாவட்டங்கள் அதிக ஆபத்து பிரதேசங்களாக உள்ளன

எனினும் ஏனைய பகுதிகள் குறைந்த ஆபத்தை கொண்ட மாவட்டங்களாக உள்ளன

எனவே அந்த மாவட்டங்களுக்கு தமிழ் சிங்கள புதுவருடத்தின்பின்னர் கட்டுப்பாடுகளில் தளர்வுகளை ஏற்படுத்தமுடியும் என்று அவர் குறி;ப்பிட்டார்

இந்தநிலையில் நிலைமை சீராகும்வரையில் கொரோனவைரஸ் கட்டுப்பாட்டு திட்டங்களை முன்னெடுத்துச்செல்வது என்று இந்த நிகழ்வின்போது தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை தொற்றாளர்களுக்கு மாத்திரமல்ல. அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற விடயம் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

Related posts