கொரோனவைரஸ் தொடர்பில் அதிகாரப்பூர்வ தகவல்களை மாத்திரம் வெளிப்படுத்தவேண்டும்

கொரோனவைரஸ் தொடர்பில் ஊடக நிறுவனங்களும் ஊடகங்களும் அதிகாரப்பூர்வ தகவல்களை மாத்திரம் வெளிப்படுத்தவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது

சுகாதார அமைச்சும் அரசாங்க தகவல் திணைக்களும் இந்த கோரிக்கையை விடுத்துள்ளன.

இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்கவின் அறிக்கையை அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாலக கலுவெல வெளியிட்டுள்ளார்.

அதில் கொரோனவைரஸ் தொடர்பில் ஒழுங்குவிதிகளுக்கு ஏற்ப உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை வெளியிடவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது

தற்போது சில செய்திகள் பல்வேறு தனிப்பட்டவர்களின் கருத்துக்களை கோடிட்டு வெளியிடப்படுகின்றன.

இது முரண்பாடுகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தும்

இதேவேளை செய்திகளை வெளியிடும்போது காட்டப்படும் புகைப்படங்கள்¸ தனிமைப்படுத்தப்பட்டுவர்களின் நலன்களுக்கு எதிராக செல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டு;ம்.

அத்துடன் தொற்றால் இறந்தவர்களின் உடலங்கள் தகனம் செய்யப்படுவது போன்ற புகைப்படங்களை தவிர்;ப்பது நல்லது என்றும் அனில் ஜாசிங்க தமது கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts