கருத்துப்பரிமாறலை கட்டுபடுத்துவதற்காக கொரோவரைஸ் பரவலை இலங்கை அரசாங்கம் பயன்படுத்துகிறது..!!

சுதந்திரமான கருத்துப்பரிமாறலை கட்டுபடுத்துவதற்காக கொரோவரைஸ் பரவலை இலங்கை அரசாங்கம் பயன்படுத்துகிறது என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

நியூயோர்க்கை தலைமையகமாகக்கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது

பேச்சுரிமைக்கான தணிக்கை மற்றும் அச்சுறுதல்கள் என்பன இலங்கையில் மாத்திரமல்ல சர்வதேச மனித உரிமைகளையும் மீறும் செயல் என்று கண்காணிப்பம் சுட்டிக்காட்டியுள்ளது.

சுகாதார அதிகாரிகளை விமர்சனம் செய்தல் மற்றும் சமூக தளங்களில் பொய்யான செய்திகளை பரப்புவோரை கைதுசெய்யப்போவதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளமை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தென்னாசிய பணிப்பாளார் மீனாட்சி கங்குலி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்ஃ

கொரோனவைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அhப்பணிப்புடன் செயற்படும் அதிகாரிகளி;ன் சிறிய தவறுகளும் சுட்டிக்காட்டப்பட்டு அவை விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுவதாக இலங்கையின் காவல்துறை குற்றம் சுமத்தியுள்ளது.

இந்தநிலையில் இலங்கையில் மாத்திரமல்ல¸ உலகளாவிய ரீதியில் மக்களை காப்பாற்றுவது அதிகாரிகளின் சவாலாகவே உள்ளதாக கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்

எனினும் யதார்த்தமற்ற விமர்சனங்களை தவிர பொதுவான விமர்சனங்கள் அவர்களின் பணிகளுக்கு பாதகமாக அமையாது.

இதன்போது விமர்சனங்களை அடுத்து அதிகாரிகள் தமது குறைப்பாடுகளை நிவர்த்தி செய்துகொள்ள சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.

ஊரங்கு வேளையில் பெரும்பாலானவர்களுக்கு தமது தகவல்களை பரிமாறிக்கொள்ளவேண்டியது அவசியமாகிறது

எனினும் இராணுவத்தளபதியை கொரோனவைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய நியமி;த்துள்ளமையானது இலங்கையர்களின் உரிமைகளை காப்பதில் உதவுமா என்பது குறித்து தாம் கவலைக்கொள்வதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தென்னாசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்

Related posts