இந்த காலக்கட்டத்தில் 2961 சிறைக்கைதிகள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2020 மார்ச் 17ம் திகதியில் இருந்து ஏப்ரல் 4ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பிணையி;ல் செல்ல அனுமதிக்கப்பட்ட சிறைக்கைதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட குழுவினால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் 2961பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சில காலத்துக்கு முன்னர் சிறைச்சாலைகளுக்கு கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டபோது…

மேலும்

கொரோனவைரஸ் மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

கொரோனவைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 162ஆக உயர்ந்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 

மேலும்

அரியாலை தேவாலயத்தில் ஆராதனையில் கலந்துகொண்டவர்கள் தொடர்ந்தும் சுய தனிமைப்படுத்தல்

கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் அரியாலை தேவாலயத்தில் இடம்பெற்ற பூசை ஆராதனையில் கலந்துகொண்டவர்கள் தொடர்ந்தும் சுய தனிமைப்படுத்தப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் இந்தநிலையில் குறித்த ஆராதனையில் கலந்துகொண்டு தங்களை இனங்காட்டாது மறைந்து இருப்பவர்கள் தம்மை பதிவு செய்துக் மேற்கொள்ளுமாறும் அல்லது அவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தமக்கு தெரியப்படுத்துமாறும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள்…

மேலும்

திருகோணமலைக் கிளைத் தொண்டர்கள் விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.

செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலைக் கிளைத் தொண்டர்கள், திருகோணமலை மாவட்டத்தின் மூலை முடுக்குகளுக்குச் சென்று, கொரோனா வைரஸ் தாக்கத்தால்; ஏற்படும் விளைவுகளையும் அதனைத் தடுக்கும் முறைகள் பற்றியுமான துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பதுடன் விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகளையும் நடத்தி வருகின்றனர்.  அத்துடன் பிரதான மக்கள் கூடும் இடங்களான வங்கிகள், மருந்தகங்கள், சந்தைகள், பஸ்கள், பஸ் நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களிலும் விழிப்புணர்வுச்…

மேலும்

தனிமைப்படுத்தலில் இருந்த 172பேர் இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் இருந்து வந்தநிலையில் இரணைமடு வான்படை முகாமில் தனிமைப்படுத்தலில் இருந்த வந்த 172பேர் இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் கடந்த 21ஆம் திகதியன்று இலங்கை வந்தநிலையில் இரணைமடு நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்களில் 45 ஆண்களும் 127பெண்களும் உள்ளடங்குகின்றனர் இந்தநிலையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து அவர்கள் இன்று வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்

மேலும்