தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு அறிவுறுத்தல்

சேவைக்கட்டணங்கள் செலுத்தப்படாத கையடக்க தொலைபேசி மற்றும் நிரந்தர தொலைபேசி இணைப்புக்களை துண்டிக்காமல் தொடர்ந்தும் இயங்கசெய்ய சேவைகளுக்கான நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு இந்த அறிவுறுத்தலை அனைத்து நிரந்தர தொலைபேசி மற்றும் கையடக்க தொலைபேசி வழங்குனர்களுக்கு விடுத்துள்ளது இதேவேளை சேவைக்கட்டணங்களை செலுத்தாதோருக்கு ஏப்ரல் மாதம் இறுதிவரை கால அவகாசம் வழங்கவேண்டும் என்றும்…

மேலும்

ஊரடங்கு சட்டத்தை மீறிய 11607 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

கொரோனவைரஸ் கட்டுப்பாட்;டு ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றத்துக்காக இதுவரை 11607 பேர் கைதுசெய்யப்பட்;டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் இந்த தொகையினர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தநிலையில் ஊரடங்கு சட்டத்தை மீறியமைக்காக 2878 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது

மேலும்

கொரோனா தொற்றுக்குள்ளாகாத அறுவர்..!!!

கொரோனோ தொற்று ஏற்பட்ட சந்தேகத்தில் யாழப்பாண போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 6 பேர் தொற்றுக்கு உள்ளாகவில்லை என பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாண மருத்துவமனையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இதனை தெரிவித்துள்ளார். இந்தநிலையில் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் சிலர் மருத்துவமனையில் கண்கானிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும்

சிறுபான்மை மதங்களை ஒதுக்குவதை தவிர்க்கவும்- உலக நாடுகளிடம் கோரிக்கை..!!

கொரோனா வைரஸ் பரவலோடு மதங்களை தொடர்புபடுத்தி பேசுவதையும் அவர்களை சிறுபான்மை மதத்தினரை ஒதுக்குவதையும் தவிர்த்துக்கொள்ளுமாறு  என அமெரிக்காவின் சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான தூதர் ஷாம் பிரவுன்பேக் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், மத ரீதியான குழுக்கள் தங்களுக்கு இடையே சமூக விலகலைப் பின்பற்ற வேண்டியது கட்டாயமானதாகும் எனவும் அவர் கோரியுள்ளார். அதேசமயம் உலகம் முழுவதும் மத ரீதியான குற்றவாளிகள்…

மேலும்

கொரோனா வைரஸை முறியடிப்பதற்கான இரு தடுப்பூசிகள் தொடர்பில் ஆய்வு..

கொரோனா வைரஸை முறியடிப்பதற்கான இரு தடுப்பூசிகள் தொடர்பிலான ஆய்வுகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் Inovio மருந்தாக்கல் நிறுவனத்தினால் இந்தத் தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தத் தடுப்பூசிகளை விலங்குகளில் பரிசோதிப்பதற்கான அனுமதி உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசி மனிதர்களுக்கு பாதுகாப்பானதா என்பது தொடர்பில் அவுஸ்ரேலிய தேசிய விஞ்ஞான நிறுவகம் மதிப்பீடு செய்யவுள்ளது. இதேவேளை,…

மேலும்

கொரோனாவை வென்று வீடுதிரும்பிய 101 வயது மூதாட்டி..!!

ஸ்பெயினில் கொரோனா வைரஸிலிருந்து 101 வயது மூதாட்டி ஒருவர் முற்றுமுழுதாக குணமடைந்துள்ளார். ஸ்பெயினின் ஹூஸ்கா (HUESCA) பகுதியிலுள்ள மருத்துவமனையில் மூதாட்டியான என்கார்னாசியன் பூசான் (Encarnacion Buisan) என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவ சிகிச்சைக்கு இடையே தனது 101ஆவது பிறந்த நாளை கடந்த மாதம் 15ஆம் திகதி கொண்டாடினார். இருப்பினும் மருத்துவமனையில் தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையில்…

மேலும்