501பேர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது..

கொரோனவைரஸ் சந்தேகத்துடன் தனிமைப்படுத்தல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டவர்களில் நான்காவது பிரிவினர் இன்று வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதன்கீழ் 501பேர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

கண்டக்காடு¸ புனைனை மற்றும் தியத்தலாவ ஆகிய நிலையங்களில் இருந்தே இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ஏற்கனவே முதலாவது தடவை 311 பேரும்¸ இரண்டாவது தடவை 144 பேரும் மூன்றாவது தடவையில் 223 பேரும் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டமை குறிப்பிட்டதக்கது

Related posts