விஜய்யின் ‘மாஸ்டர்’ டீம் சமூக தனிமைப்படுத்துதலில்!!

தமிழகம் உள்பட இந்தியாவில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சமூகதனிமைப்படுத்துதலை அரசு வலியுறுத்தி வருகிறது. பொதுமக்கள் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்காமல் இருந்தாலே இந்த வைரசை இந்தியாவில் இருந்து விரட்டி விடலாம் என்றும் அதனால் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அரசு வலியுறுத்தி வருகின்றது.

அரசின் வலியுறுத்தலை பொதுமக்களும் பெரும்பாலும் கடைபிடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய்யின் மாஸ்டர் டீம் ஒருவரை ஒருவர் சமூக தனிமைப்படுத்துதலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் நேரில் சந்திக்காமல் வீடியோ சாட் மூலமும் ஹேங் அவுட் மூலமும் ஒருவரையொருவர் தொடர்பு கொண்டு சமூக தனிமைப்படுத்துதலை கடைபிடித்து வருகின்றனர்.

இது குறித்து மாஸ்டர் திரைப்படத்தின் நாயகி மாளவிகா மோகனன் தனது சமூக வலைத்தளத்தில் ’பிரச்சினைகள் வரும், போகும். கொஞ்சம் சில் பண்ணு மாப்பி. மாஸ்டர் டீமாகிய நாங்கள் சமூக தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்கிறோம் நீங்களும் கடைபிடிக்கின்றீர்களா? என்று கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் விஜய், தயாரிப்பாளர் ஜெகதீஷ், அனிருத் மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts