பல்லாயிரம் கோடி கிலோமீற்றர் கடந்துள்ள ஒளிரும் மேகக் கூட்டம்- நாசா செய்துள்ள சாதனை!


அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் பல்லாயிரம் கோடி கிலோ மீற்றர்களுக்கு அப்பால் உள்ள மேகக் கூட்டத்தைப் படம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

உலகின் மிகப் பெரிய விண்ணியல் தொலை நோக்கியான அப்பிள் தொலைநோக்கி மூலம் நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இளஞ்சிவப்பு நிற ஒளிரும் மேகக் கூட்டம் ஒன்றைக் கண்டனர்.

இதில் குறிப்பிடப்படும் ஒளி ஆண்டு என்பது, நொடிக்கு 3 இலட்சம் கிலோ மீற்றர் வேகத்தில் ஒளி பயணிப்பதாகும். இந்த மேகக் கூட்டத்தைச் சுற்றி ஏராளமான நட்சத்திரங்களும், விண்கற்களும் இருந்தன.

இந்த இளஞ்சிவப்பு மேகக் கூட்டத்திற்கு எல்.எச்.ஏ 120-என் 150 (LHA 120-N 150) என்று பெயரிட்டுள்ளனர். சமீபகாலத்தில் மிக அதிக தொலைவில் நாசாவால் கண்டுபிடிக்கப்பட்ட மேகக்கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts