தொழிலாளர்களை திட்டமிட்டு ஏமாற்றும் அரசாங்கம்….!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 50 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கு, கடந்த அரசாங்கக் காலப்பகுதியில் தேயிலை சபையினால் 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தேயிலை சபையின் தலைவர் ஜயம்பதி மொலிகொட இதனை எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கக் காலத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அழுத்தத்துக்கு அமைவாக, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் இணங்கி இருந்தது.

எனினும் இது நடைமுறைக்கு வரவில்லை.

சட்டச் சிக்கல்களை காட்டி இந்த கொடுப்பனவு வழங்கல் திட்டம் கைவிடப்பட்டது.

எனினும் இதற்காக இலங்கை தேயிலை சபையின் நிதியில் இருந்து 600 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்ததாகவும், அதனை தற்போது பயன்படுத்த முடியும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் நேற்று அறிக்கை ஒன்றை விடுத்து தெரிவித்திருந்தார்.

இதுசம்பந்தமாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் ஜயம்பதி மொலிகொடவை கேட்டபோது, அவ்வாறான நிதி எதுவும் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை என்று தெரிவித்தார்.

Related posts