கொரோனாவிலிருந்து மீண்டெழும் இலங்கை….! இன்று எவரும் இல்லை…!

கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

இதனடிப்படையில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான 95 பேர் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் 84 பேர் ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

10 பேர் வெலிகந்த மருத்துவமனையிலும் ஒருவர் முல்லேரியா மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகத்தில் 255 பேர் நாட்டிலுள்ள 24 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இன்றைய தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நால்வர் இன்றைய தினம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வெளியேறியுள்ளனர் என்பதோடு மூவர் ஏற்கனவே வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts