கடற்றொழிலாளர்கள் தமது தொழில்களுக்கு செல்லமுடியும்.

ஊரடங்கு அமுலில் உள்ளபோதும் கடற்றொழிலாளர்கள் தமது தொழில்களுக்கு செல்லமுடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா அறிவித்துள்ளார்

எனினும் இதன்போது உரிய ஆவணங்களை எடுத்துச்செல்லுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்

நேற்று மாத்தறை பகுதி;க்கு சென்றிருந்த அவர் அங்கு தொழிலாளர்கள் பணிகளுக்கு வராமை காரணமாக மீன் விநியோகத்தில் தாமதம் இருப்பதை அவதானித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்து மீன்களை சந்தைகளுக்கு அனுப்ப தாம் ஆவண செய்வதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்

Related posts