ஈரானில் பணயக்கைதியாக இருந்த அமெரிக்கர் காலமானார்..!

ஈரானில் பணயக்கைதியாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்க பிரஜையான ரொபர்ட் லெவின்சன் காலமானார். அமெரிக்காவின் FBI நிறுவனத்தில் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 13 வருடங்களுக்கு முன்னர் ஈரானின் கிஷ் தீவில் வைத்து இவர் காணாமல் போயிருந்தார் என புலனாய்வு துறையினர் தகவல் வழங்கியிருந்தனர். எனினும் குறித்த நபர் ஈரானிடம் பணயக் கைதியாக வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்…

மேலும்

மலேசிய மன்னரும், ராணியும் தனிமைபடுத்தப்பட்டனர்..!!

மலேசிய மன்னரான சுல்தான் அப்தல்லா சுல்தான் அஹமட் மற்றும் மகாராணி டூங்கு அசீசா அமினாமயுமனாஹ் ஆகியோர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த மன்னரின் மாளிகையில் வீட்டு பணிப்புரிந்த 7 பேருக்கு கொரோனா தொற்று பரவியமையை தொடர்ந்து இவர்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும்

கொரோனாவை கருத்தில் கொண்டு கைதிகளை விடுதலை செய்ய கோரிக்கை..!!

கொரோனா பரவல் அச்சுறுத்தலை கருத்திற்கொண்டு, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுவிக்கப்படக்கூடிய கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு அமைப்புகள் மற்றும் புத்திஜீவிகள் இணைந்து ஜனாதிபதிக்கும், துறைசார் முக்கியஸ்த்தர்களுக்கும் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 50 சதவீதமான கைதிகள், விளக்கமறியல் கைதிகளாகவும், பிணைவழங்கக்கூடியவர்களாகவும் இருக்கின்றனர். அத்துடன் பிணை நிபந்தனைகளை பூர்த்திசெய்ய முடியாமை, தண்டப்பணத்தை…

மேலும்

தொழிலாளர்களை திட்டமிட்டு ஏமாற்றும் அரசாங்கம்….!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 50 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கு, கடந்த அரசாங்கக் காலப்பகுதியில் தேயிலை சபையினால் 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தேயிலை சபையின் தலைவர் ஜயம்பதி மொலிகொட இதனை எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கக் காலத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அழுத்தத்துக்கு…

மேலும்

2 மணித்தியாலங்கள் தபால் காரியாலயத்தை திறக்குமாறு அறிவித்தல்…!

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த காலப்பகுதியில் குறைந்த பட்சம் நாளொன்றுக்கு இரண்டு மணித்தியாலங்களாவது அஞ்சல் அலுவலகங்களை திறந்து வைக்குமாறு தபால் மா அதிபர் அனைத்து தபால் காரியாலங்களுக்கும் அறிவித்துள்ளார். அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அவர் இந்த தகவலை அனைத்து தபால் நிலையங்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.

மேலும்

கொரோனாவிலிருந்து மீண்டெழும் இலங்கை….! இன்று எவரும் இல்லை…!

கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். இதனடிப்படையில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான 95 பேர் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 84 பேர் ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 பேர் வெலிகந்த மருத்துவமனையிலும் ஒருவர் முல்லேரியா மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று…

மேலும்

ஜனாதிபதி செயலாளர் சற்று முன்னர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு…!

இலங்கை மத்திய வங்கி, வணிக வங்கி, திறைசேரி மற்றும் காப்புறுதி சேவை என்பன அத்தியாவசிய சேவை பிரிவுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி, ஏனைய வங்கிகள் மற்றும் காப்புறுதி சேவை நிறுவனங்கள் மற்றும் அவற்றின் கிளைகள், திறைசேரி என்பனவற்றை திறந்து வைத்திருக்குமாறு, ஜனாதிபதி செயலாளரினால், மத்திய வங்கி…

மேலும்