ஸ்பெயினில் தீவிரமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள்..!

கொரோனா நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஸ்பெயினில் தீவிரமாக அதிகரித்து வருகிறது.

அங்கு இன்று மாத்திரம் 738 பேர் உயிரிழந்த நிலையில் மொத்தமாக ஸ்பெயினில் 3ஆயிரத்து 434 பேர் இந்த நோயினால் மரணித்துள்ளனர்.

47 ஆயிரத்து 610 நோயாளர்கள் ஸ்பெயினில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அதேநேரம் இத்தாலியில் மொத்தமாக 6 ஆயிரத்து 820 பேர் உயிரிழந்தனர்.

இன்றைய தினம் அங்கு மரணங்கள் எவையும் பதிவாகவில்லை என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் புதிதாக 47 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன், மொத்தமாக அங்கு 81 ஆயிரத்து 218 பேர் இந்த நோய்க்காக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அங்கு 4 புதிய மரணங்கள் பதிவாகின. அமெரிக்காவில் 54 ஆயிரத்து 968 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 700க்கும் அதிகமானவர்கள் மரணித்துள்ளனர்.

பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ், கொரோனா நோய் தொற்றுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

71 வயதான அவர், கொவிட்-19 வைரஸ் பீடிப்புக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள போதும், சுகதேகத்துடன் இருப்பதாக, க்ளாரொன்ஸ் இல்லத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது சார்ள்ஸ் மற்றும் கமீலா ஆகியோர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.

அவருக்கு எவ்வாறு இந்த நோய் தொற்று ஏற்பட்டது என்பதை உறுதி செய்ய முடியாதுள்ளது.

இதேவேளை, மலேசியா முழுமையாக முடங்கியுள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கையுரைக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

உலகத்துக்கு தேவையான 5ல்3 கையுரைகளை மலேசியாவே உற்பத்தி செய்து சந்தைப்படுத்துகின்ற நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த தட்டுப்பாடு கொவிட்-19 தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான பணிகளை முன்னெடுப்பதில் புதிய சவாலை தோற்றுவித்திருப்பதாக ரொயிட்டர்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, அமெரிக்காவில் கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக 2 ட்ரில்லியன் டொலர்களை ஒதுக்கப்படவுள்ளன.

இதற்கு அமெரிக்க செனட் மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்துக்கு இடையில் இணக்க்பபாடு காணப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts