வீட்டிலேயே வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் அருண் விஜய்!!

நடிகர் அருண்விஜய் எப்போதும் உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். ஒவ்வொரு படத்திலும் அவரது உடற்கட்டை பார்த்து வியந்த ரசிகர்கள் ஏராளம்.

பகலில் ஒர்கவுட் செய்ய நேரம் கிடைக்கவில்லை நேரம் இல்லை என்றாலும் இரவில் பல மணி நேரங்கள் உடற்பயிற்சிக்கு மட்டும் செலவிடுவேன் என அவரே பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

தற்போது கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்கின்றனர். ஷூட்டிங் எதுவும் இல்லை என்பதால் அருண் விஜய்யும் வீட்டில் தான் இருக்கிறார்.

ஜிம் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் அவர் தனது வீட்டில் மொட்டை மாடியில் இருந்தே தற்போது ஒர்கவுட் செய்கிறார். அதுமட்டுமன்றி ஸ்டண்ட் பயிற்சியையும் அங்கேயே செய்கிறார். அதன் விடீயோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் அவர். அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

“நீண்ட காலத்திற்கு பிறகு வீட்டிலேயே பார்க்கர் ஸ்டண்ட் பயிற்சி செய்கிறேன். வீட்டிலேயே இருங்கள். நீங்கள் வீட்டிலேயே எதாவது செய்து ஃபிட்டாக இருங்கள்” என கூறியுள்ளார் அருண் விஜய்

Related posts