இங்கிலாந்து பாராளுமன்றம் ஒருமாத காலத்துக்கு மூடப்படுகிறது..

கொரோனா வைரஸைக் கையாள்வதற்கான அவசரகாலச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர் இன்று புதன்கிழமை மாலை பாராளுமன்றம் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரவுசெலவுத் திட்டம் மீதான வாக்களிப்பு ஏப்ரல் 21 க்குப் பின்னர் இடம்பெறும் என்று கூறப்படுகின்றது.

ஏற்கனவே மார்ச் 31 ஆம் திகதி அன்று ஈஸ்ரர் பண்டிகைக்காக பாராளுமன்றம் மூடப்பட இருந்தது.

இருப்பினும், பாராளுமன்றத்தை திறந்த நிலையில் வைத்திருப்பது வைரஸ் பரவுவதற்கு எதுவாக அமைந்துவிடும் என்ற கவலைகள் எழுந்ததன் காரணமாக பாராளுமன்றம் மூடப்படுகின்றது.

மேலும் வீடியோ கொன்பரன்சிங் மூலம் அமைச்சரவைக் கலந்துரையாடல் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வெஸ்ற்மின்ஸ்ரர் பகுதி வைரஸ் நோயின் பாதிப்புக்கூடிய பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுவதாகவும், சில பாராளுமன்ற உறுப்பினர்கள் நோயின் அறிகுறிகளுடன் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts