கொரோனவைரஸை கட்டுப்படுத்துவதற்காக பிந்திய நிலையில் மூடப்படும் நாடாக இந்தியா.

கொரோனவைரஸை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா இன்று நள்ளிரவு 12 மணிமுதல் 21 நாட்கள் வரை 3 வாரங்கள் தொடர்ந்து முடக்கப்படுவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்

இதன்படி கொரோனவைரஸை கட்டுப்படுத்துவதற்காக பிந்திய நிலையில் மூடப்படும் நாடாக இந்தியா வரிசைப்படுத்தப்படுகிறது

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி இன்றிரவு 8 மணியளவில் உரையாற்றினார்.

கொரோனா வைரஸை தடுத்து நிறுத்த மற்றும் பாதுகாப்புடன் இருப்பதற்கு சமூகத்தில் ஒவ்வொருவரும் தனித்திருக்க வேண்டும் என்பதே ஒரே வழியாகும். எனவே ஒவ்வொருவரும் மற்றவரிடம் இருந்து தொலைவில் இருங்கள். உங்களது வீடுகளில் இருங்கள் என்று நரேந்திர மோடி தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts