மாஸ்டர் ரிலிஸ் தேதி குறித்து படக்குழுவே கூறிய தகவல்!!

மாஸ்டர் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம். இப்படத்தை பார்க்க பல லட்சம் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அப்படியிருக்க சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளிவந்து பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா மிக எளிமையாக நடந்து முடிந்தது.

இதற்கு பல காரணம் கூறினாலும், தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸும் ஒரு காரணம்.

அதனால், தான் பெரியளவில் கூட்டத்தை கூட்டாமல் எளிமையாக நடத்தி முடித்ததாக கூறியுள்ளனர்.

மேலும், மாஸ்டர் படத்தின் ரிலிஸ் எப்போது என்ற விஷயம் இன்னும் பலருக்கு சரியாக தெரியவில்லை.

இதுக்குறித்து மாஸ்டர் படக்குழு கூறுகையில் கண்டிப்பாக நிலைமை இன்னும் சில நாட்களில் சீராகிவிடும்.

அப்படி ஆகும் பட்சத்தில் கண்டிப்பாக மாஸ்டர் படம் ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வருவது உறுதி என்று கூறியுள்ளனர்.

அதோடு மாஸ்டர் படம் பார்ப்பதற்கு பலரும் ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அப்படி மாஸ்டர் தள்ளிச்சென்றால், மே 21ம் தேதி தான் போகும், ரம்ஜான் விருந்தாக மாஸ்டர் வரவும் வாய்ப்புள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது

Related posts