பிக்பாஸ் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது!!

பிக்பாஸ் நிகழ்ச்சி சர்ச்சைகளுக்கு நடுவே தொடங்கப்பட்டாலும் போக போக ரசிகர்களை மிகவும் ஈர்த்துவிட்டது என்றே சொல்லலாம். பிக் பிரதர்ஸ் என்ற யூரோபியன் நிகழ்ச்சியாக தொடங்கப்பட்ட இந்த பிக்பாஸ் இந்தியாவிலும் அனைத்து துறை சார்ந்த பிரபலங்களை கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

ஹிந்தியில் தான் முதல் தொடக்கம் எனலாம். அண்மையில் தான் இதன் 13 வது சீசன் முடிந்தது. தமிழ், தெலுங்கில் 3 சீசன்களை கடந்துவிட்டது. கன்னடத்தில் 5 சீசன்களை தாண்டிவிட்டது. மலையாளத்தில் இரண்டாவது சீசன் அண்மையில் தொடங்கப்பட்டது.

தற்போது கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுக்க பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது இந்நிகழ்ச்சியை தயாரிக்கும் நிறுவனம் ஊழியர்களின் உடல் நலன் பாதுகாப்பு கருதி நிகழ்ச்சிக்கான பணிகளை தற்காலிகமாக நிறுத்தம் செய்துள்ளதாம்.

அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு இப்படி ஒரு முடிவாம், சில நாட்களுக்கு பின் மீண்டும் நிகழ்ச்சிககான பணிகள் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

மலையாளத்தில் சீசன் 2 பிக்பாஸ் நிகழ்ச்சி கொரோனா வைரஸ் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளதாம்.

Related posts