இலங்கையரான அருண் செல்வராஜாவுக்கு சென்னை மேல்நீதிமன்றால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் உளவுப்பார்த்தார் என்று குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையரான அருண் செல்வராஜாவுக்கு சென்னை மேல்நீதிமன்றால் ஐந்து வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவருக்கு 20ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்;பட்;டுள்ளது.

கடந்த வார இறுதியில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது

இந்த வழக்கு 2012ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது.

பாகிஸ்தானுக்காக உளவுப்பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தஞ்சாவூரை சேர்;ந்த தமீம் அன்சாரி கைதுசெய்யப்பட்ட நிலையில் அருண் செல்வராஜாவும் கைது செய்யப்பட்டார்.

இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரத்தில் பணியாற்றிய அமிர் சுபைர் சித்தீக் என்பவரின் வழிகாட்டலில் இவர்கள் தமிழகத்தில் உளவுப்பார்த்தனர் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது

இந்தநிலையில் இந்திய தேசிய புலனாய்வு சேவையினர் இது தொடர்பிpல் 2013இல் மீண்டும் வழக்கை தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து 2015ஆம் ஆண்டில் அன்சாரி மற்றும் செல்வராஜா ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது

2018ம் ஆண்டு இவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் ஆரம்பமாகின.

இந்தநிலையில் அருண் செல்வராஜா தொடர்பில் வழக்கு இறுதிப்படுத்தப்பட்டு கடந்த வார இறுதியில் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது

எனினும் தமீம் அன்சாரி மற்றும் இன்னும் கைதுசெய்யப்படாமல் இருக்கும் இலங்கையரான மொஹமட் அன்வர் சிராஜ் அலி¸ பாகிஸ்தானிய உளவுத்துறை அதிகாரி அமிர் சுபைர் சித்தீக் ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் தொடர்;ந்தும் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts