புத்தளம் இரணவில பகுதியில் “வொய் ஒப் அமரிக்கா ஒலிபரப்பு நிலையம்”

புத்தளம் இரணவில பகுதியில் “வொய் ஒப் அமரிக்கா ஒலிபரப்பு நிலையம்” செயற்பட்டு இடத்தை இலங்கை மின்சார சபைக்கு கையளிக்க அமைச்சரவையின் ஒப்புதல் எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் அமைச்சரவைக்கு யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது

எனினும் இன்னும் அமைச்சரவை இதற்கு ஒப்புதல் வழங்கவில்லை.

400 ஏக்கர் பரப்பை கொண்ட இந்த இடத்தில் இயற்கை எரிவாயு மற்றும் சூரியக்கதிர் மி;ன்சார மையங்களை அமைக்க முடியும் என்று அமைச்சர் தமது யோசனையில் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை இலங்கை மின்சார சபை 150மெகாவோட்ஸ் சூரியக்கதிர் மின்சாரத்துக்கான கேள்விப்பத்திரங்களை கோரியுள்ளது

இதன்படி 3 மெகாவோட்ஸ் தொடக்கம் 10 மெகாவோட்ஸ் மின்சாரத்தை பெறக்கூடிய வகையில் 20 சூரியக்கதிர் திட்டங்களை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளது

Related posts