தேர்தலின்போது ஊடக ஒழுங்குகள் உட்பட்ட ஏனைய விடயங்கள் தொடர்பில் நான்கு வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்படவுள்ளன.

தேர்தலின்போது ஊடக ஒழுங்குகள் உட்பட்ட ஏனைய விடயங்கள் தொடர்பில் நான்கு வர்த்தமானி அறிவி;த்தல்கள் இன்று வெளியிடப்படவுள்ளன.

அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்யாதிருக்கும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையக பணிப்பாளர் சன்ன பி டி சில்வா தெரிவித்துள்ளார்

இதில் புதிய நியமனங்கள்¸ பதவியுயர்வுகள்¸ பொதுநிதிகளை தனி;ப்பட்ட அரசியல் விடயங்களுக்கு பயன்படுத்தல் என்பனவும் அடங்கவுள்ளன.

ஊடகங்களை பொறுத்தவரையில் அனைத்து ஊடகங்களும் சமநிலை செய்திகளை வழங்கவேண்டும். அத்துடன் பிரசாரங்களுக்கான நேரங்களை ஒதுக்கும்போது அதில் பாரபட்சம் காட்டப்படக்கூடாது.

தேர்தல் காலத்தில் அரச நிறுவனங்களில் இடமாற்றங்கள் மேற்கொள்ளக்கூடாது என்ற அம்சமும் வர்த்தமானி ஒன்றில் இடம்பெறவுள்ளது

Related posts