றிசார்ட் பதியூதீனை வெளியேற்றினார் சஜித்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கூட்டணியில் இணைந்து போட்டியிடாமல் தனித்து போட்டியிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசஇ முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதியூதீனுக்கு அறிவித்துள்ளார்.

பௌத்த சங்க சபையினரின் கோரிக்கைக்கு அமைய எதிர்க்கட்சித் தலைவர் இந்த அறிவிப்பை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனடிப்படையில் றிசார்ட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளது.

வடக்குஇ கிழக்குஇ களுத்துறைஇ கேகாலைஇ கொழும்புஇ கண்டி மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்துவது என பதியூதீன் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Related posts