சஜித் தலைமையிலான முன்னணி யானை சின்னத்திலேயே போட்டியிடவேண்டிய நிலை உருவாகியுள்ளது

அன்னம் சின்னத்தை சஜி;த் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசிய சக்திக்கு பொதுத்தேர்தலுக்காக வழங்கினால் ஐந்து வருடங்களுக்கு அதனை திரும்பப்பெற்றுக்கொள்ளமுடியாது என்று அறிவிக்கப்பட்டமையை அடுத்து தமது அன்னம் சின்னத்தை ஐக்கிய தேசிய சக்திக்கு வழங்க நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணி மறுத்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து ஐக்கிய தேசிய சக்தி யானை சின்னத்திலேயே போட்டியிடவேண்டிய நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சஜித் தலைமையிலான முன்னணி அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதற்கு நேற்று ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுவும் ஒப்புதல் வழங்கியிருந்தது.

இந்தநிலையில்; நேற்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க ஐக்கிய தேசிய சக்திக்கு அன்னம் சின்னத்தை வழங்குவதற்கு ஜனநாயக தேசிய முன்னணி இணங்கியுள்ளதாக குறிப்பிட்டார்

இதேவேளை சஜித் பிரேமதாசவை கண்டி¸ குருநாகல் மற்றும் கம்பஹா போன்ற இடங்களி;ல் போட்டியிடுமாறு கோரப்பட்டுள்ளது

எனினும் தம்மை பொறுத்தவரையில் அவர் கொழும்பில் போட்டியிடவேண்டும் என்று சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்

இதற்கிடையில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு கூட்டத்தின்போது நுவரெலிய மற்றும் திகாமடுல்ல மாவட்டங்களுக்கு யானை சின்னத்தை தருமாறு நவின் திசாநாயக்கவும் தயா கமகேயும் கோரிக்கை விடுத்தனர்.

பாலித ரங்கே பண்டார¸ ருவன் விNpஜவர்த்தன ஆகியோரும் இதற்கு இணையான கோரிக்கையை முன்வைத்தனர்.

எனினும் இறுதியில் அன்னத்தை ஏற்றுக்கொள்வதென்று கட்சியின் செயற்குழு தீர்மானித்தது.

Related posts