கடன் திட்டங்களுக்காக ஜனாதிபதியின் செயலரின் பெயரை சிலர் பயன்படுத்துகின்றனர்

சில ஆட்கள்¸ அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து கடன் உட்பட்ட பல வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதியின் செயலாளர் பிபி ஜெயசுந்தரவினதும் ஏனைய உயரதிகாரிகளின் பெயர்களையும் பயன்படுத்தி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இந்த தகவலை அரச வங்கி ஒன்றின் தலைவர் பிபி ஜெயசுந்தரவுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து இவ்வாறான அழுத்தங்கள் அரச அதிகாரிகளுக்கு கொடுக்கப்படுமானால் அவர்கள் காவல்துறையில் முறையிடமுடியும் என்று பிபி ஜெயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

Related posts