எயார்பஸ்ஸிடம் நட்டஈடு பெற சட்டஆலோசனைகள் பெறப்படுகின்றன

எயார்பஸ் நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்; நீதி ஆலோசனைகளை பெறவுள்ளது.

எயார்பஸ் நிறுவனம் தமக்கு சார்பாக நடந்துக்கொள்வதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவிக்கு 2 மில்லியன் டொலர்களை வழங்கியதாக கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் 3 பில்லியன் டொலர்களை வழங்குவதாக எயார்பஸ் உறுதியளித்திருந்தது.

இதேபோன்று எயார்பஸ் நிறுவனம் அமரிக்கா¸ பிரித்தானியா¸ மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளின் விமான நிறுவனங்களுக்கும் லஞ்சம் வழங்கியுள்ளது.

இந்தநிலையில் விசாரணைகளின் முடிவில் அமரிக்கா¸ பிரித்தானியா மற்றும் பிரான்ஸின் விமான நிறுவனங்களுக்கு எயார்பஸ் நிறுவனம் 4 பில்லியன் டொலர்களை நட்டஈடாக செலுத்தவேண்டியுள்ளது.

இந்தநிலையில் இலங்கைக்கும் எயார்பஸ் நிறுவனம் வழங்கவேண்டிய நட்டஈடு தொடர்பாக சட்டஆலோசனைகள் பெறப்படுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Related posts