உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஹேமஸ்ரீக்கு பிணை

-உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமஸ்ரீ பெர்னாண்டோ பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த பிணை அனுமதியை இன்று வழங்கியது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இந்திய புலனாய்வு துறை முன்கூட்டியே இலங்கை புலனாய்வு துறைக்கு தகவல் வழங்கியிருந்தது. எனினும் அதனை பொருட்படுத்தாமை காரணமாகவே அந்த தாக்குதல் நடத்தப்பட்டது. எனவே அதற்கு பொறுப்பு கூறும் வகையிலேயே ஹேமஸ்ரீ பெர்னாண்டோ கைது செய்யப்பட்டிருந்தார். இதேவேளை குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் காவல் துறை அதிபர் பூஜித் ஜெயசுந்தரவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related posts