பொதுத்தேர்தலுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகிறது

பொதுத்தேர்தலுக்கான முதல்கட்ட சந்திப்பு ஒன்று நாளை தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது.

இந்த சிறப்பு சந்திப்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த சந்திப்பி;ல் பொதுத்தேர்தல் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளன.

அத்துடன் பொதுத்தேர்தலுக்கான ஆரம்பப்பணிகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் பேசப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை விரைவில் கட்சிகளின் செயலாளர்களுடன் சந்திப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts