விமானங்களை சோதனைக்கு உட்படுத்த தீர்மானம்!

சீன நகருக்கு விமான சேவைகளை மேற்கொள்ளும் விமானங்களை விரிவான வகையில் பரிசோதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சி. நிமல்சிறி தெரிவித்துள்ளார்.

புதிய கொரோனா வைரஸினை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமான பயணிகள் மற்றும் விமானத்தின் சுகாதாரத்தை உறுதி செய்வதிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்கு அமைவாக ஒரு முறை பயன்படுத்தப்பட்ட பொருட்களை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் சீனாவுக்கான விமான சேவைகளை மேற்கொள்ளும் விமான நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் வாழும் சீனப் பிரஜைகள் இலங்கைக்கு வருவதை தவிர்க்குமாறு அறிவித்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts