ரணில் -சஜித் சந்திப்பு தோல்வி

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

இந்த சந்திப்பு கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. 71பேரை கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் சஜித் பிரேமதாசாவை கட்சியின் தலைவராக்க வேண்டும் என கோரி வருகின்றனர்.

எனினும் சஜித் உடனான சந்திப்பின்போது ரணில் விக்ரமசிங்க அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையிலேயே நேற்று கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ரணில் கட்சியின் தலைவராகவும் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் மற்றும் பிரதமர் வேட்பளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

Related posts